சினிமாவில் கோடிகளை உதறிவிட்டு… விஜய் அரசியலுக்கு வந்ததற்கு இதுவும் காரணம்… உண்மையை உடைத்த தந்தை SAC..!

By Soundarya on மார்கழி 16, 2025

Spread the love

சினிமாவில் கொடிகட்டிப் பறந்து கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும், அந்த வசதியான வாழ்க்கையைத் துறந்து விஜய் அரசியலுக்கு வந்திருப்பது தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அவரது நோக்கத்தைக் காட்டுகிறது என்று அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, தமிழகத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் விஜய் மனதில் தோன்றியதற்கு அவர் நடித்த சில திரைப்படங்களும் கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

திரையுலகம், சமூகம், அரசியல் என எந்தத் துறையாக இருந்தாலும், காலத்தால் ஏற்படும் மாற்றங்களை யாராலும் தடுக்க முடியாது என்றும் எஸ்.ஏ.சி. குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த தனது பார்வையை அவர் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.