குஷியோ குஷி..! “இனி 100 நாள் வேலை 125 நாட்கள் வேலை” திட்டமாக மாற்றம்… மத்திய அரசு முக்கிய முடிவு..!

By Soundarya on மார்கழி 16, 2025

Spread the love

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்றி, வேலை நாட்களை 100-லிருந்து 125 நாட்களாக அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் என்பதற்குப் பதிலாக, 125 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலையைச் சட்டப்பூர்வமாக உறுதி செய்யும். இந்த புதிய மசோதா, தற்போதைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை ரத்து செய்துவிட்டு, புதிய பெயரில் “(விக்சித் பாரத் – ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்))அமல்படுத்தப் பரிந்துரைக்கிறது.

இந்த மாற்றங்கள், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதையும், மக்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. ஒவ்வொரு நிதியாண்டிலும் 125 நாட்கள் ஊதிய வேலைவாய்ப்புக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கவும் பரிந்துரைக்கிறது.