கணவர் இருக்கும் பொழுது ஒரு பெண் இரண்டு ஆணையும் அல்லது மனைவி இருக்கும் பொழுது ஒரு பெண் இரண்டு பெண்ணையும் திருமணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றம். ஆனால் பழங்குடியின சமூகங்களுடைய பழக்கவழக்கங்கள், மரபுகளை பாதுகாப்பதற்கு இந்திய சட்டங்களில் விதிகள் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் வட மாநிலங்களில் உள்ள சில பகுதிகளில் ஒரே பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் திருமணம் செய்யும் வழக்கம் இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது. குறிப்பாக இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் இந்த பழக்கம் இன்னும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒரே பெண்ணை அண்ணன், தம்பி இரண்டு பேர் பொதுவெளியில் பலர் அறிய திருமணம் செய்து கொண்டார்கள். இமாச்சல பிரதேச மாநிலம் சிம்மவூர் மாவட்டத்தில் உள்ள ஷில்லா கிராமத்தில் இந்த திருமணமானது நடைபெற்றது.
இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வந்தது. இவர்கள் ஹட்டி இனத்தைச் சேர்ந்தவர்கள். மணமகள் சுனிதாவை அண்ணன் தம்பியான பிரதீப் மற்றும் கபில் இருவரும் ஊரறிய பலர் முன்னணியில் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த திருமணம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படி திருமணம் செய்து கொள்ளும் முறை காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதுகுறித்து மணப்பெண் கூறுகையில், ” திருமணம் செய்வது என்னுடைய முடிவு. நானே விரும்பி இந்த முடிவை எடுத்தேன். இந்த திருமணத்திற்கு என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை .
இந்த பாரம்பரிய வழக்கத்தை பற்றி நான் நன்றாக தெரிந்து கொண்டேன். எனவே விருப்பப்பட்டு தான் இந்த முறையை தேர்ந்தெடுத்தேன்” என்று கூறியுள்ளார் . இதுகுறித்து மணமகன் கபில் கூறுகையில், ” நான் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் அங்கேயே வசிக்கிறேன். ஆனால் என் திருமணத்தின் மூலமாக ஒரே பெண்ணை நானும் என்னுடைய அண்ணனும் திருமணம் செய்ததால் எங்களுடைய மனைவிக்கு ஒட்டுமொத்த குடும்பம் ஆதரவாக உள்ளது. அவர் மீது நாங்கள் அனைவருமே அன்பு காட்டுகிறோம்” என்று கூறியுள்ளார்.
