INDVSPAK: Post-Match Presentation-ஐ புறக்கணித்ததற்கு காரணம் சூர்யகுமார் யாதவ் தான்… உண்மையை போட்டுடைத்த பாக்., கேப்டன்..!!

By Soundarya on புரட்டாதி 15, 2025

Spread the love

ஆசிய கோப்பை தொடரின் ஆறாவது லீக் போட்டி துபாயில் நடைபெற்றதில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் ஒன்பது  விக்கெட்டுக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பாக  குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார். இதனை தொடர்ந்து ஆடிய இந்தியா 15 .5 ஓவரில் மூன்று விக்கெட்டிற்கு 131 ரன்கள் எடுத்து அபாரமாக வென்றது.

அபிஷேக் ஷர்மா 13 பந்தில் 31 ரன்கள் குவித்தார்.திலக் வர்மா 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். கேப்டன் சூரியகுமார் யாதவ் பொறுப்போடு விளையாடி 47 ரன்களை குவித்தார். இந்நிலையில் IND vs PAK போட்டி முடிந்த பின்னர், பாகிஸ்தான் வீரர்கள் கைகொடுக்க வந்த போது, இந்திய வீரர்கள் அதை புறக்கணித்தனர்.  போட்டி முடிந்ததும் களத்தில் இருந்த சூர்யகுமாரும், ஷிவம் துபேவும் நேராக டிரஸ்ஸிங் ரூம் சென்றனர். ஆனால் இந்திய வீரர்கள் வருவார்கள் என பாக்., வீரர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதனையடுத்து  Post-Match Presentation-ஐ பாகிஸ்தான் கேப்டன் புறக்கணித்தார். இதற்கு காரணம் பாகிஸ்தான் வீரர்களுடன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்கமல் சென்றது தான் என்று பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா தெரிவித்துள்ளார்.