தலை இல்லாமல் குளத்தில் மிதந்த பச்சிளம் குழந்தை… கள்ளக்காதலால் தாய் செய்த கொடூர செயல்… கன்னியாகுமரியை அலறவிட்ட அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 15, 2025

Spread the love

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள குடியிருப்பில் சம்பக் குளத்தில் தலை இல்லாத பச்சிளம் குழந்தையின் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சமீபத்தில் குழந்தை பெற்ற ரேகா என்ற 38 வயது பெண்ணை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது தன்னுடைய குழந்தையை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து விசாரிக்கையில் ஈத்தா மொழி அருகே உள்ள அம்மச்சியார் கோவிலை சேர்ந்த ரேகா தற்போது சிவ செல்வபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளார். ரேகாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரைப் பிரிந்து ரேகா தனிமையில் வசித்து வந்துள்ளார்.

   

இந்நிலையில் இளைஞர் ஒருவருடன் அவருக்கு தகாத பழக்கம் ஏற்பட்ட நிலையில் ரேகா திடீரென கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரேகா சமீபத்தில் குழந்தை பெற்ற நிலையில் கள்ளக்காதலில் பிறந்த குழந்தை தனக்கு அவமானத்தை ஏற்படுத்தி தரும் என்று கருதிய அவர் அதை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஈவு இரக்கமில்லாமல் பச்சிளம் குழந்தையை கொலை செய்த ரேகா சடலத்தை குளத்தில் வீசியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் கன்னியாகுமரியில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.