ஐயோ மனுஷனா..? மிருகமா..? நாய் கடித்த 18 மணி நேரத்திற்குள்… இளைஞரை பார்த்து அலறி ஓடிய மக்கள்..!!

By Soundarya on மார்கழி 23, 2025

Spread the love

உத்தரப் பிரதேசத்தில் தெருநாய் கடித்த வெறும் 18 மணி நேரத்திற்குள் இளைஞர் ஒருவர் வினோதமான முறையில் நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய் கடித்த அந்த இளைஞர், மற்றவர்களைக் கடிக்கப் பாய்வது மற்றும் விசித்திரமான ஒலிகளை எழுப்புவது என அசாதாரணமாகச் செயல்பட்டது அப்பகுதியில் பரபரப்பை உண்டாக்கியது.

பொதுவாக, ரேபிஸ் (Rabies) நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதற்குப் பல நாட்கள் அல்லது வாரங்கள் ஆகும். ஆனால், இந்த இளைஞருக்கு மிகக் குறுகிய காலத்திலேயே இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டது மருத்துவர்களிடையே வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மருத்துவ நிபுணர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.