பெற்ற மகளின் கண்முன்னே கள்ளக்காதலனுடன் தனிமை!.. மகளுக்கு வலைவீசிய ‘சைக்கோ’ மாமா.. நெஞ்சை உலுக்கும் சிறுமியின் வாக்குமூலம்..!!!

By Muthu Mani on வைகாசி 24, 2026

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துராமன் என்பவரின் மனைவி மீனா (42). இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், மீனாவுக்கு பாளை திம்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநரான மணிகண்டன் (24) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் இவர்கள் இருவரும் தனிமையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், மணிகண்டன் மீனாவின் 14 வயதுடைய, 9-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளார். தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அச்சிறுமியை வற்புறுத்தியதுடன், தாயின் கண் முன்னேயே பாலியல் தொந்தரவுகளும் கொடுத்து வந்துள்ளார். தன் மகளுக்கு நடக்கும் இந்த அநீதியை அறிந்தும், கள்ளக்காதலன் மீது இருந்த மோகத்தால் தாய் மீனா அதனைத் தட்டிக்கேட்காமல் மௌனம் காத்து வந்துள்ளார்.

   

தாயின் ஆதரவு கிடைக்காத நிலையில், அச்சிறுமி துணிச்சலுடன் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெண் போலீசார், சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தாய் மீனா மற்றும் அவரது கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்தனர்.