ஐயோ போச்சா… எனக்கு பொண்டாட்டி பர்த்டே முக்கியம்… ரூ 5,000 கொடுத்து பீயனை… பேப்பர் திருத்தச் சொன்ன பேராசிரியர்… அதிரடி சஸ்பெண்ட்…!

Spread the love

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷஹீத் பகத் சிங் அரசு முதுகலை பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், மாணவர்களின் தேர்வுத் தாள்களைத் திருத்தும் முக்கியமானப் பணியைத் தனது அலுவலக உதவியாளரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்றைய தினம் தனது மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகத் தான் உடல்நிலை சரியில்லை என்று பொய் சாக்குபோக்கு கூறிவிட்டு, மனைவியுடன் உணவகத்திற்குச் சென்று நேரத்தைச் செலவிட்டுள்ளார்.

தேர்வுத் தாள்களைத் திருத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அந்த உதவியாளருக்கு, அப்பேராசிரியர் அதற்குப் பிரதிபலனாக ரூ 5,000 பணமும் புதிய சீருடையும் வழங்கியதாகத் தெரிகிறது. கல்வி அமைப்பின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில், தகுதியில்லாத ஒரு நபரைக் கொண்டு மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் விடைத்தாள்களைத் திருத்தச் சொன்ன செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

உதவியாளர் தேர்வுத் தாள்களைத் திருத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மாநிலக் கல்வித் துறை உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையின் முடிவில், பணியில் கடுமையான அலட்சியம் காட்டியதற்காகவும், மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடியதற்காகவும் சம்பந்தப்பட்ட பேராசிரியர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Swetha

Recent Posts

திக்… திக்… நான் உங்கள் மகளைக் கொன்றேன்… போனில் மாமியாருக்கு ஷாக் கொடுத்த மாப்பிள்ளை… கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்…!

கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…

17 minutes ago

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

8 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

8 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

8 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

9 மணத்தியாலங்கள் ago