நடிகர் சங்கத்திற்கு ஸ்டிரிக்டாக கண்டிஷன் போட்ட தயாரிப்பாளர் சங்கம்.. பொட்டிப் பாம்பாய் அடங்கப்போகும் நடிகர்கள்..!!

By admin on ஆவணி 21, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்களின் சம்பளம் மற்றும் படப்பிடிப்புக்கான தேதி ஒதுக்கீட்டில் குளறுபடி நடக்கிறது. இதனால் வட்டிக்கு பணம் வாங்கி படத்தை எடுக்கும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தயாரிப்பாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தினர் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி ஆகியோருடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த கூட்டத்தில் செயலாளர் விஷால் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

   

இந்த பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர் சங்கத்தினர் 11 முக்கிய நிபந்தனைகளை முன் வைத்துள்ளனர். அதில் முக்கியமானது நடிகர்களுக்கு பேசப்பட்ட சம்பளத்திலிருந்து 10% மட்டும் தான் அட்வான்ஸ் பணமாக கொடுக்கப்படும். அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் 10 சதவீதம், 10 சதவீதம் என டப்பிங் பேசி முடிப்பதற்கு முன்பாக முழு தொகையும் கொடுக்கப்படும். ஏனென்றால் நடிகர்கள் கால்ஷீட் கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதால் தயாரிப்பாளர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். அதனை தவிர்க்கும் பொருட்டு இந்த நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது.

   

 

அதன் பிறகு நடிகர்களுக்கு சம்பளம் மட்டும்தான் பேசியபடி கொடுக்கப்படும். அவர்கள் அழைத்து வரும் பவுன்சர்கள், மேக்கப் ஆர்டிஸ்ட், அசிஸ்டன்ட் ஆகியோர்களுக்கு சம்பந்தப்பட்ட நடிகர்கள் தான் சம்பளம் கொடுக்க வேண்டும். தயாரிப்பாளரை தொந்தரவு செய்யக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள் சம்மதம் தெரிவித்து விட்டார்களாம்.

விரைவில் இதுகுறித்து முக்கிய நபர்களிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் விஷால் கலந்து கொள்ளாததால் அவர் மீதும் கார்த்தி, நாசர் ஆகியோர் அப்செட்டில் உள்ளனர். விஷாலை தொடர்பு கொள்ள முயற்சி செய்தால் அவரது அசிஸ்டன்ட் தான் செல்போனை எடுத்து பேசுகிறாராம். எது கேட்டாலும் தான் கேட்டு சொல்கிறேன் என கூறிவிட்டு அதன் பிறகு எந்த பதிலும் கொடுப்பதில்லையாம். விஷால் மீதும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டிடம் கட்டி முடித்தவுடன் முதல் நிகழ்ச்சியே என் திருமணம் தான்" விஷால் /Actor Vishal says When building is completed the first event is my wedding