CINEMA
என்னுடைய ப்ளானே வேற.. வருஷத்துக்கு 4 படம்.. ஓப்பனாக பேசிய பிரசாந்த்..!!
90’ஸ் காலகட்டத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாக வளம் வந்தவர் நடிகர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் மூலம் திரையுலகில் தந்து பயணத்தை ஆரம்பித்த பிரசாந்த் ஜீன்ஸ், ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், வின்னர், பூமகள் ஊர்வலம், திருடா திருடா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். ஒரு சில காரணங்களால் பிரசாந்தின் சினிமா வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார் பிரசாந்த். தளபதி விஜய் நடிப்பில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திலும் பிரசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்தகன் பட வெற்றி பிரசாந்துக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்த நிலையில் கோட் படத்தில் பிரசாந்தின் கதாபாத்திரமும் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் சினிமாவில் மீண்டும் பிரசாந்த் ஒரு ரவுண்டு வருவார். இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரசாந்திடம் அடுத்த பிளான் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரசாத் ஒரு வருஷத்துக்கு 4 படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளேன். குறிப்பிட்ட இயக்குனர்களுடன் நடிக்க வேண்டும் என்பது கிடையாது. அனைத்து இயக்குனர்களுடனும் இணைந்து வேலை பார்க்க விரும்புகிறேன்.
கோட் படம் கண்டிப்பாக குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக இருக்கும் எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து விஜயின் அரசியல் வருகை மற்றும் கோட் படத்தின் டி-ஏஜிங் தொழில்நுட்பம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரசாந்த் ஒவ்வொருவருக்கும் சமூக அக்கறை என்பது இருக்க வேண்டும். அதனை செய்ய முற்படும்போது நாம் அவர்களை வரவேற்க வேண்டும். படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு வாரங்கள் தான் உள்ளது. வெயிட் பண்ணி பாருங்க. கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும் என கூறியுள்ளார்.