பான் கார்டு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு…! இதை செய்யாவிட்டால் ரூ.1000 அபராதம்…. உடனே வேலையை முடிங்க…!!

By Devi Ramu on மார்கழி 22, 2025

Spread the love

பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான இறுதி காலக்கெடுவை வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதன்படி, வரும் டிசம்பர் 31, 2025-க்குள் இந்த இணைப்பை முடிக்காதவர்களின் பான் கார்டுகள் ஜனவரி 1, 2026 முதல் செல்லாததாக அறிவிக்கப்படும். இவ்வாறு பான் கார்டு முடக்கப்பட்டால், வருமான வரி தாக்கல் செய்ய முடியாது, வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதில் சிக்கல் ஏற்படும் மற்றும் ரூ. 50,000-க்கு மேல் பணப் பரிமாற்றம் செய்ய இயலாது போன்ற பல நிதி சார்ந்த நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும்.

இந்த இணைப்பை பொதுமக்கள் மிக எளிதாக எஸ்எம்எஸ் (SMS) மூலமாகவே செய்து கொள்ளலாம். உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து UIDPAN எனத் தட்டச்சு செய்து, இடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண் மற்றும் 10 இலக்க பான் எண்ணைக் குறிப்பிட்டு 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். மேலும், incometax.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் ஆன்லைனில் இதனை மேற்கொள்ளலாம். டிசம்பர் 31-க்குப் பிறகு இணைப்பவர்கள் ரூ. 1,000 அபராதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால், அதற்கு முன்னரே பணிகளை முடிப்பது அவசியமாகும்.