BREAKING: இரவோடு இரவாக விஜய் கட்சியில் இணைந்த முக்கிய புள்ளி… தமிழக அரசியலில் பரபரப்பு….!

By Nanthini on மார்கழி 22, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக விஜயின் தமிழக வெற்றி கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பல வியூகங்களை வகுத்து வருகிறது. அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் சமீபத்தில் விஜய் கட்சியில் இணைந்த பிறகு அடுத்தடுத்து முக்கிய பிரபலங்களையும் விஜய் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார். கடந்த சில நாட்களாகவே தமிழக வெற்றி கழகம் கட்சியில் மாற்றுக் கட்சியினர் பலரும் இணைந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் பிற கட்சியின் முக்கிய தலைவர்களை இணைக்கும் முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று இரவு பிரபல வழக்கறிஞர் சத்யகுமார் விஜய் முன்னிலையில் தன்னை தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைத்துக் கொண்டார். முன்னதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏவான ஜேசிபி பிரபாகரனின் மகன் அமலன், youtube பெலிக்ஸ், அரசியல் விமர்சகர் அனந்தஜீத் ஆகியோ தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்து இருந்தனர். ஒரே நாளில் முக்கிய முகங்கள் விஜய் கட்சியில் இணைந்தது அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.