‘கங்குவா’ படத்தின் வில்லன் அணிந்திருக்கும் இந்த ஷர்ட்-டின் விலை.. இத்தனை லட்சமா..? 

By Mahalakshmi on வைகாசி 4, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பான் இந்தியா திரைப்படம் என்றால் அது இதுவரை பாகுபலி தான்.

   

ஆனால் அதையும் தாண்டி 38 மொழிகளில் கங்குவா திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் புஷ்பா 2, கல்கி 2898 ஏடி படங்களின் பட்ஜெட்டை விட கங்குவா திரைப்படத்தின் பட்ஜெட் குறைவு. இருப்பினும் இந்த படத்திற்கு இல்லாத ரீச் கங்குவா திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. ஏழு நாடுகளில் படமாக்கப்பட்ட கங்குவா திரைப்படம் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

   

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வந்தது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு பாதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்திருக்கின்றார். இவர் அண்மையில் வெளியான ரன்பீர் கபூரின் அனிமல் திரைப்படத்தின் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தவர்.

இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிப்பதால் இவர் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது. இந்நிலையில் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படத்தில் அவர் அணிந்திருக்கும் ஆடையின் விலை தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவர் அணிந்திருக்கும் ஆடையின் விலை 1,17,390 ரூபாய் ஆகும். இதை கேட்ட பலரும் ஷாக்காகி இருக்கிறார்கள்.