சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நிலவரங்களின் காரணமாக, உள்நாட்டுச் சந்தையிலும் தங்கம் விலையில் இன்று (ஜூலை 24) அதிரடி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, தங்கம் விலை சவரனுக்கு ரூ 2,160 குறைந்து, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ 13,230-க்கும், சவரன் ரூ 1,05,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலகளாவிய பொருளாதார மாற்றங்களால் இந்தியச் சந்தையில் இன்று தங்கம் விலை பெருமளவில் சரியக்கூடும் என்று காலை 7 மணிக்கே செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அதேபோல விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்களும் முதலீட்டாளர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.
