“கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…” இரு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்… பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி… நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி… போலீஸ் அதிரடி விசாரணை…!

By Visaka on ஆடி 24, 2026

Spread the love

கோட்டயம் மாவட்டம் பொன்குன்னம் அருகே உள்ள செருவள்ளியம்பலப் பகுதியில் மாருதி வேகன் ஆர் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகிய இரு கார்கள் ஒன்றுடன் ஒன்று பலமாக மோதி விபத்துக்குள்ளாகின. இதில் இரு வாகனங்களிலும் பயணித்தவர்களுக்குக் காயம் ஏற்பட்டது. புனலூர்-மூவாற்றுப்புழை நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைத்தளங்களில் கார்கள் சென்ற திசை மற்றும் `திருப்பம் எடுத்த வாகனம் குறித்து மாறுபட்ட தகவல்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. விபத்து நடந்தவுடனேயே அப்பகுதி மக்களும் வியாபாரிகலும் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

https://twitter.com/HateDetectors/status/2080213474307944691/photo/1

   

தற்போது பொன்குன்னம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான சரியான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இணையத்தில் பரவி வரும் சிசிடிவி பதிவுகள் மற்றும் முரண்பாடான கூற்றுகளை ஆய்வு செய்து வரும் அதிகாரிகள், விபத்திற்கு யாருடைய தவறு காரணம் என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. சாலையைக் கடக்கும் போதும் மற்றும் திருப்பங்களில் வாகனங்களை இயக்கும் போதும் ஓட்டுநர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனப் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.