10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்… தேர்வு இல்லை, நேர்காணல் மட்டுமே… அஞ்சல்துறையின் மெகா அறிவிப்பு… உடனே விண்ணப்பியுங்கள்…!!!

By Muthu Mani on வைகாசி 18, 2026

Spread the love

புதுக்கோட்டை மாவட்ட அஞ்சலகங்களில் அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக்கான (RPLI) நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயது நிறைவடைந்த யார் வேண்டுமானாலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்; இதற்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை. வேலை இல்லாத இளைஞர்கள், சுயதொழில் செய்பவர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் நேரடி முகவர் பணிக்கும், ஓய்வு பெற்ற மத்திய/மாநில அரசு ஊழியர்கள் கள அலுவலர் பணிக்கும் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

இப்பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அவர்கள் மேற்கொள்ளும் வணிகத்தின் அடிப்படையில் ஊக்கத்தொகை (Commission) பெறுவார்கள். மேலும், தேர்வு செய்யப்படுவோர் ரூ.5,000 மதிப்பிலான தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) அல்லது கிசான் விகாஸ் பத்ரா (KVP) பத்திரத்தை பிணையாகச் சமர்ப்பிக்க வேண்டும், இது உரிமம் முடிவடைந்த பின் திருப்பி வழங்கப்படும். இதற்கான நேர்முகத் தேர்வு வருகிற மே 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் எதிரில் உள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

   

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ், வயதுச் சான்று, அடையாள மற்றும் இருப்பிடச் சான்றுகள் (ஆதார், PAN கார்டு போன்றவைகளின் அசல் மற்றும் நகல்கள்) மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துகொண்டு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.