சமூக வலைத்தளங்களில் எப்போதுமே நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோரின் நட்பு குறித்த செய்திகள் விவாதப் பொருளாக இருந்து வருகின்றன. வழக்கமாக விஜய்யின் பிறந்தநாளுக்கு அவருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவிக்கும் த்ரிஷா, இந்த ஆண்டும் அதுபோல ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். ஆனால், இந்த முறை த்ரிஷா பகிர்ந்த புகைப்படம் உண்மையானது அல்ல என்றும், அது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலியான புகைப்படம் என்றும் பாடகி சுசித்ரா ஆதாரங்களுடன் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
த்ரிஷா பகிர்ந்த அந்தப் புகைப்படம் ஏன் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதற்கான காரணங்களை சுசித்ரா தனது வீடியோவில் விளக்கியுள்ளார். அந்தப் புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தால் அது 2D மற்றும் AI தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, விஜய்யின் சட்டை காலர் மற்றும் அவர் மேஜைக்கு அருகில் நிற்கும் விதம் ஆகியவை இயற்கையாக இல்லாமல் மடிந்து காணப்படுவதாகவும், அங்குள்ள பெரிய கேக்கிற்கு முன்னால் மூன்று சிறிய கேக்குகள் இருப்பதும் AI-ன் வேலைப்பாடுதான் என்று சுசித்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.
விஜய்யின் சட்டசபை புகைப்படத்தைப் பயன்படுத்தி, இந்த போலியான படத்தை த்ரிஷா உருவாக்கியுள்ளதாகக் சாடியுள்ள சுசித்ரா, “இதுதான் காதலா?” என நக்கலாகக் கேள்வி எழுப்பியுள்ளார். சுசித்ராவின் இந்த விளக்கக் காணொளி தற்போது இணையத்தில் மிக வேகமாகப் பரவி வருவதோடு, த்ரிஷா பகிர்ந்த புகைப்படம் நிஜம்தானா என்ற சந்தேகத்தையும், பெரும் விவாதத்தையும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
