Operation-க்கு பிறகு அஜித் இப்போ எப்படி இருக்காரு? என்ன பண்றாரு.? மனைவி ஷாலினியே வெளியிட்ட புகைப்படம்..

By Ranjith Kumar

Published on:

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் தான் விடாமுயற்சி. இப்படம் கடந்த ஒரு வருடமாக எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது படங்களில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு வந்து கொண்டிருந்த நிலையில், இந்த சமயத்தில் தான் லைக்கான நிறுவனத்தின் போதிய பணம் இல்லாததால் படப்பிடிப்பை சிறிது காலம் தள்ளி வைத்திருந்தார்கள்.

   

இதற்கிடையே அஜித் மீண்டும் உலக சுற்றுலா செல்லலாம் என்று துபாயில் உள்ள தன் பைக்கை தயார் செய்ய சொல்லி இருந்தார். அதற்கான வேலையை மிக விறுவிறுப்பாக நடத்தி வந்த நிலையில், திடீரென அஜித்தின் உடல்நிலை சரியில்லாமல் போக, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த சமயத்தில் பல வதந்திகள் பரவி வந்தன. அஜித்திற்கு மூலையில் கட்டி இருப்பதாகவும், அது கடந்த சில மாதங்களாகவே அவருக்கு தொந்தரவாக இருந்து வந்து நிலையில் தற்போது கண்டறியப்பட்டு அதை அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கப்பட்டுள்ளது என்றும், இதற்காக சிறந்த மருத்துவர்கள் மதுரை மற்றும் கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்டார்கள் என்று, பல வதந்திகள் பரவி வந்தன.

ஆனால் இதை எல்லாம் பொய் என்று அஜித்தின் மேலாளர் சுரேஷ் தெரிவித்து இருந்தார். அஜித்திற்கு வெறும் காது ஓரம் நரம்பு பிரச்சனை மட்டும்தான் உள்ளது, வேறு எதுவும் இல்லை, அதுவும் தற்போது சிகிச்சை பெற்று அவர் நலமாக இருக்கிறார, என்று தெரிவித்திருந்தார். தற்போது மூன்று நாட்களுக்கு முன்னால் அஜித் அவர்கள் நல்லபடியாக குணமாகி வீடு திரும்பியுள்ளார் என்றும், அதன் பின்னதாக தன் மகனின் FOOSBALL விளையாட்டை பார்ப்பதற்காக அவர் படிக்கும் பள்ளிக்குச் சென்று மகனுடன் இருந்த வீடியோ தற்போது வெளியாகி மிக வைரலாகி கொண்டிருந்தது.

ஆனாலும் அஜித்தின் அந்த சர்ச்சை அடங்காததால், தற்போது அவரது அவரின் மனைவியான ஷாலினி அவர்கள் அஜித்தும் அவரது மகனும் ஒன்றாக இணைந்திருக்கும் புகைப்பட ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அஜித் தன் மகனுக்கு FOOSBALL shoes வாங்கிக் கொடுத்ததை ஷாலினி புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இதற்கு ஒரேடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இந்த புகைப்படத்தை வெளியிட்ட Shalini. தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆழ்ந்த சந்தோஷத்தில் அதை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

author avatar
Ranjith Kumar