கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் அதிசய கோவில்.. எங்கு இருக்குனு தெரியுமா..? ஆண்டுகள் கடந்தும் தீராத மர்மம்..

By Priya Ram

Updated on:

விஜயநகர மாவட்டத்தில் இருக்கும் பல கோவில்களை விஜயநகர பேரரசர்களும், மன்னர்களும் கட்டியது ஆகும். அந்த கோவில்கள் விஜயநகர பேரரசர்கள் மற்றும் ஹொய்சாளர் மன்னர்களின் கட்டிடக்கலையை எடுத்து காட்டுகிறது. ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பால் ஹம்பியில் இருக்கும் கோவில்கள் உலக பாரம்பரிய சின்னமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

   

ஹம்பியில் இருக்கும் விருபாக்ஷா கோவில் ஹொய்சாளர் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது ஆகும். இந்த நிலையில் அதிசயம் என்னவென்றால் ரங்க மண்டப சுவர் மீது கோவில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும். இந்த அதிசயத்தில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் பல ஆண்டு காலமாக முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால் இதுவரை யாராலும் அதனை கண்டுபிடிக்க இயலவில்லை. கட்டிட கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் பக்தர்கள் என ஏராளமானோர் நிழல் தலைகீழாக விழுவது குறித்து விவாதம் செய்து வருகின்றனர். ஆனாலும் பதில் கிடைக்கவே இல்லை. கடந்த 1565-ஆம் ஆண்டு நடந்த போரில் ஹம்பி நகரமே அழிந்தது. ஆனால் அந்த கோவிலுக்கு மட்டும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

கம்பீரமாக காட்சி தரும் விருபாக்ஷா கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தேர் திருவிழா நடைபெறும். பிரசித்தி பெற்ற அந்த தேர் திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். பெங்களூரில் இருந்து 342 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அந்த ஹம்பி கோவிலுக்கு பேருந்திலும், ரயிலிலும் சென்று அங்கிருந்து கோவிலுக்கு செல்லலாம்.

author avatar
Priya Ram