“பேருந்தில் ஏறிய போதை ஆசாமியின் அலப்பறை…” ரத்த வெள்ளத்தில் துடித்த பயணி….! பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

ஈரோடு அரசுப் பேருந்தில் ஏறிய போதை ஆசாமி ஒருவர், சக பயணியைத் அரிவாளால் வெட்டிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சிவகிரி அம்மன் கோவில் வரை சென்ற அரசுப் பேருந்தில், அரசு மருத்துவமனை நிறுத்தத்தில் ஏறிய பூபதி என்ற அந்தப் போதை ஆசாமி, பயணம் முழுவதும் சக பயணிகளுடன் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பேருந்து மூலப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, பேருந்தில் இருந்த ஒரு பயணியை வெட்டினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற பயணிகள் அனைவரும் இணைந்து அவரை பிடித்து கட்டிப் போட்டனர்.

பின்னர், இது குறித்துத் தாலுகா போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூபதியைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். வெட்டுக் காயமடைந்த பயணி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், போதையில் தகராறு செய்த அந்த நபர், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரை ஏற்கெனவே இரண்டு இடங்களில் வெட்டிவிட்டுத்தான் பேருந்தில் ஏறியது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“குதிரை பேரம்.. அமித்ஷா பிளான்.. ஆளுநர் முட்டுக்கட்டை”…தவெக-வின் முதல் ரியாக்‌ஷன்.. இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 6 நாட்கள் கடந்த நிலையிலும், ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி ஒரு பெரும்…

3 minutes ago

“எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த மாஜி அமைச்சர்கள்”… இன்று இரவுக்குள் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம்… அதிமுகவில் அதிரடி திருப்பம்….!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சியமைக்கத் தேவையான 118 எம்எல்ஏக்களின்…

8 minutes ago

டீப்ஃபேக் வீடியோவா..? விஜய்யின் அதிகார ஆசை தமிழகத்திற்குப் பேரழிவு: டிடிவி தினகரன் அதிரடி அட்டாக்…!

அமமுக எம்.எல்.ஏ காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்ததாக வெளியான வீடியோ முற்றிலும் போலியானது என்று டிடிவி…

13 minutes ago

“அவ்வளவு தான் டைம் ஓவர்”… ஆளுநர் கையில் நாலே நாலு ஆப்ஷன்.. கடைசியில் மொத்தமாக மாறும் கேம்… விஜய்க்கு காத்திருக்கும் டுவிஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான திருப்பமாக, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஒரு 'தொங்கு சட்டசபை'…

47 minutes ago

“கிம் ஜாங் உன்–னை தொட்டாலே.. இனி அணுஆயுத தாக்குதல் தான்”… அமெரிக்காவுக்கு செக் வைத்த வடகொரியா…. இனி தான் ஆட்டமே ஆரம்பம்…!

வடகொரியாவின் அணுஆயுதக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிரடி மாற்றம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங்…

53 minutes ago

மாற்றுத்திறனாளி இளைஞருக்கு நேர்ந்த கொடுமை: 10 நாட்களில் கைவரிசை காட்டிய ‘கில்லாடி’ மனைவி…!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள கோதை மங்கலம் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, தரகர் மூலம் பெண் தேடப்பட்டு வந்துள்ளது.…

57 minutes ago