இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். காலை எழுந்தாலே செல்போன் தேடக்கூடிய காலம் தான் இன்று உள்ளது. குறிப்பாக செல்போன்பயன்படுத்தக் கூடியவர்களில் பெரும்பாலானோர் ரீல்ஸ் செய்து வீடியோக்களை வெளியிடுகின்றனர். மற்றவர்களுடன் நாம் பதிவிடும் வீடியோக்கள் தான் மக்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புதுப்புது ஐடியாக்களை யோசித்து ரீல்ஸ் வெளியிடுகிறார்கள்.
லைக்ஸ் வாங்க வேண்டும், பிரபலமாக வேண்டும் என்ற வெறி பலரை முட்டாள்களாக மாற்றி வருகிறது. ஒரு சில லைக்குக்காக உயிரையே பனையம் வைத்து வருகிறார்கள். அதன்படி ரயில் தண்டவாளத்தில் ஒரு வாலிபர் ரயிலுக்கு அடியில் படுத்துக்கொண்டு வீடியோ வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் அந்த வாலிபர் படுத்துக்கொள்ளும் நிலையில் அவருக்கு மேல் ரயில் செல்கிறது. இது சாகசம் அல்ல, முட்டாள்தனம் என இவரைப் போன்றவர்களுக்கு புரியாதா? உங்களையெல்லாம் என்னதான்டா செய்கிறது என நெட்டிசன்கள் வீடியோவை பார்த்து கடுமையாக திட்டி தீர்த்து வருகிறார்கள்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…