சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் ஆற்றில் இறங்கி விளையாடிக் கொண்டிருக்கும்போது, மறைந்திருந்த முதலை ஒன்று திடீரென மின்னல் வேகத்தில் அவர் மீது பாய்ந்து தாக்குகிறது. வீடியோவில், நபர் ஒருவர் ஆற்றின் நடுவில் நின்றபடி தனது முகத்தில் தண்ணீரைத் தெளித்து மிகவும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கிறார். முன்னால் படகில் அமர்ந்திருக்கும் தனது நண்பர்களுக்குத் தான் செய்வதைக் காட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அவருக்கு, திடீரெனத் தனது கால்களுக்கு அருகில் ஏதோ ஒன்று அசைவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. முதலில் அது பெரிய மீனாக இருக்கும் என்று தவறாகக் கருதிய அவர், ஆர்வத்துடன் தண்ணீருக்குள் கையை விட்டு அந்த உயிரினத்தைப் பிடிக்க முயற்சி செய்கிறார்.
Unexpected endingpic.twitter.com/SUNBBN4kfx
— Massimo (@Rainmaker1973) January 3, 2026
