“விசில் போடுங்கப்பா….we will…” ஜனநாயகன் படத்தை பார்த்து ஒரு வார்த்தையில் விஜய் சொன்ன ரிவ்யூ… சுவாரஸ்யத்தை பகிர்ந்த எச்.வினோத்…!!

By Devi Ramu on ஆடி 22, 2026

Spread the love

முதலமைச்சர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், அனைத்துத் தடைகளையும் தாண்டி வரும் ஜூலை 23 வியாழக்கிழமையன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக பொங்கல் வெளியீடாக வரவிருந்த இத்திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் தாமதமானதால் தள்ளிப்போனது. சமீபத்தில் சென்சார் போர்டு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியதைத் தொடர்ந்து, டிக்கெட் முன்பதிவு தொடங்கி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு இயக்குநர் எச்.வினோத் ஊடகங்களைச் சந்தித்துத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்த பிறகு விஜய் மிகவும் மகிழ்ச்சியடைந்து, “சூப்பர் பா.. We Will Rock!” என்று ஒரே வரியில் தனது பாராட்டைத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார். விஜய்யின் இந்த ஒன்லைன் ரிவ்யூ குறித்த செய்தி வெளியானதை அடுத்து, அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.