“மனிதாபிமானம் இன்னும் சாகல” தாகமாக இருந்த நாய்.. அடுத்து முதியவர் செய்த காரியம்… “இதுதான் உண்மையான செல்வம்” பாராட்டும் இணையவாசிகள்…!!

By Soundarya on மாசி 20, 2026

Spread the love
சமூக வலைதளங்களில் ஒரு முதியவர் செய்த நெகிழ்ச்சியான செயல் பலரது இதயங்களையும் தொட்டுள்ளது. அந்த வீடியோவில், கோடை வெயிலின் தாக்கத்தால் தாகத்துடன் தவித்த தெருநாய் ஒன்றுக்கு, அந்த முதியவர் மனிதாபிமானத்துடன் தனது இரு கைகளையும் ஏந்தி அதில் தண்ணீரை நிரப்பிக் கொடுக்கிறார். தாகத்தில் இருந்த அந்த நாய், அவர் கைகளில் இருந்து தண்ணீரை மிக ஆவலுடன் குடிப்பது காண்போரை நெகிழச் செய்கிறது.

எவ்வித எதிர்பார்ப்புமின்றி வாய் பேச முடியாத ஜீவன்களின் துயர் துடைத்த அந்த முதியவரின் செயல், அன்பு மற்றும் கருணையின் வெளிப்பாடாகப் போற்றப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதுடன், “உண்மையான செல்வம் என்பது பிற உயிர்கள் மீது காட்டும் அன்புதான்” என்ற ஆழமான கருத்தை உணர்த்துவதாகப் பயனர்கள் நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.