தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. 20 ஆண்டுகளுக்கு மேலாக நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பிறமொழி படங்களிலும் அதிகமாக நடிக்கிறார். சமீபத்தில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தன்னை பற்றி பேசியதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் நடிகை திரிஷா பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். எளிமையான சுடிதார் உடையில் யாருமே இல்லாமல் அவர் தனியாக வந்து கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வரும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அங்கிருந்த சில ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க அமைதியாக சிரித்தபடி அவர் போஸ் கொடுத்து விட்டுச் சென்றார்.திருப்பதி கோவில் முன் எடுத்த புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்ட திரிஷா, சிறந்த நாள் இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
