“மதிப்பெண் வேண்டும்னா நான் சொல்றத கேள்…” பல் மருத்துவ மாணவியை தனியாக அழைத்து சென்ற அதிகாரி… பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!…!!

By Devi Ramu on மார்கழி 24, 2025

Spread the love

சென்னை குன்றத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவக் கல்லூரியில், விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டு பயிலும் மாணவிக்கு அங்கிருந்த நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி என்பவர் பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது. அந்த அலுவலர் மாணவியைச் சிசிடிவி கேமரா இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று தவறாகப் பேசியதுடன், தன்னுடன் நெருக்கமாக இருந்தால் மதிப்பெண்களை உயர்த்திக் கொடுக்க உதவுவதாகக் கூறியுள்ளார். இதற்கு அந்த மாணவி உடன்படாததால், அவருடைய அகமதிப்பீட்டு மதிப்பெண்களை   குறைத்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்துத் தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீஸார், மாணவியின் அலைபேசி குறுஞ்செய்திகளை அழித்து ஆதாரத்தை மறைக்க முயன்ற விடுதி வார்டன் ஜான்சி மற்றும் நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள அவர்கள் இருவரையும் பிடிப்பதற்குத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.