குழந்தையின் மூக்கிலிருந்து வீசிய துர்நாற்றம்… சளி என்று நினைத்து அலட்சியமாக இருந்த பெற்றோர்… கடைசியில் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி..!!

By Soundarya on சித்திரை 6, 2026

Spread the love

சிறுவன் ஒருவனின் மூக்கிற்குள் பெரிய அளவிலான நைலான் கவர் சிக்கியிருந்ததும், அது அறுவை சிகிச்சை இன்றி அகற்றப்பட்டதும் குறித்த நெகிழ்ச்சியான பதிவை அவரது தாய் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பே அந்தச் சிறுவனின் மூக்கிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகத் தந்தை புகார் கூறியுள்ளார். ஆனால், அது சாதாரண சளி மற்றும் இருமலால் ஏற்பட்ட வாசனை என்று நினைத்த பெற்றோர், அதற்குரிய மருந்துகளை வாங்கி கொடுத்துள்ளனர். இருப்பினும், அந்தத் துர்நாற்றம் குறையாமல் தொடர்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்தத் துர்நாற்றம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. சிறுவனின் தந்தை மூக்கிற்குள் ஏதோ சளி இருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், தாய் உற்று நோக்கியபோது அது சளி போலத் தெரியவில்லை, ஏதோ ஒரு மர்மப் பொருள் உள்ளே இருப்பதை அவர் உணர்ந்துள்ளார். உடனடியாகப் பதறியபடி குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையைச் சோதித்த மருத்துவர்கள், மூக்கிற்குள் ஏதோ ஒன்று ஆழமாகச் சிக்கியுள்ளதை உறுதி செய்தனர்.

   

இதனைத் தொடர்ந்து, குழந்தைக்கு மயக்க மருந்து ஊசி செலுத்தப்பட்டு, அவர் தூங்கிய பிறகு மருத்துவர்கள் ஒரு கருவியின் உதவியுடன் மூக்கிற்குள் இருந்த பொருளை வெளியே எடுத்தனர். அது ஒரு மிகப்பெரிய நைலான் கவர் என்பது தெரியவந்தபோது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். “இவ்வளவு பெரிய கவரை யாருக்கும் தெரியாமல் குழந்தை எப்படி மூக்கிற்குள் நுழைத்தார் என்று தெரியவில்லை; உடனடியாக இதை அகற்றவில்லை என்றால் மூக்கை அறுவை சிகிச்சை செய்துதான் எடுக்க வேண்டியிருக்கும் என மருத்துவர்கள் கூறினர்” என்று அந்தத் தாய் அதிர்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். தனது குழந்தை ஆபத்திலிருந்து தப்பியதற்காக அவர் இறைவனுக்கு நென்றி தெரிவித்துள்ளார்.