BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

By SATHISH R on ஆடி 4, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியை தங்களது கட்சித் தலைமை உத்தரவிட்டால் ராஜினாமா செய்ய வைப்போம் என பாலசுப்பிரமணியன் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தன்னை ராஜினாமா செய்யக்கோரி தவெக தரப்பில் அழுத்தம் கொடுப்பதாக எம்.எல்.ஏ கருணாநிதி தற்போது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே திமுக எம்.எல்.ஏக்கள் இருவரிடம் தலா 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக ஆளுநரிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ள சூழலில், தவெக மாவட்ட செயலாளரின் இந்த அதிரடி பேச்சு மற்றும் அதன் தொடர்ச்சியாக எழுந்துள்ள போலீஸ் புகார் ஆகியவை தவெக கட்சிக்கும் அதன் தலைவர் விஜய்க்கும் அரசியல் ரீதியாக பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளன.