தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

By Gayathri on ஆவணி 17, 2026

Spread the love

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அந்தப் பெண்ணுடன் தான் நெருக்கமாக இருந்த காணொளியை அவரது மகனுக்கே இவர் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மகன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அசோக் குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது கைபேசியை சோதனையிட்டதில், 18 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததற்கான ஆதாரங்களும் சிக்கின. இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை வன்கொடுமை செய்தது, ஆபாச வீடியோ அனுப்பியது மற்றும் சிறுமியிடம் அத்துமீறியது உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு காரைக்கால் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை தீர்க்கமாக விசாரித்த நீதிபதி, குற்றவாளியான அசோக் குமாருக்கு சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒட்டுமொத்தமாக 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு போக்சோ வழக்குகளில் ஒரு முக்கிய முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.