வாசலில் குரைத்தது குற்றமா? அடுத்த நிமிடமே துடிதுடித்த பிஞ்சு நாய்க்குட்டிகள்…. திருச்சியில் பெண்ணின் கொடூர செயல்…!

Spread the love

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் அடுத்த கம்பரசம் பேட்டை பகுதியில், பிறந்து சில நாட்களே ஆன நாய்க்குட்டிகளைப் பெண் ஒருவர் கொடூரமான முறையில் சுவற்றில் வீசி சித்திரவதை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாய் பேச முடியாத ஜீவன்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற செயல் காண்போரை நிலைகுலையச் செய்துள்ளது.

அந்தப் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் தெரு நாய்களுக்குத் தொடர்ந்து உணவளித்து வந்துள்ளார். இதனை அவரது வீட்டின் எதிரே வசிக்கும் மீனாட்சி என்பவர் ஆரம்பம் முதலே எதிர்த்து வந்துள்ளார். நாய்களுக்கு உணவளிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நாய்களை மீனாட்சி அடித்து விரட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் பிறந்த சில நாய்க்குட்டிகள் மீனாட்சியின் வீட்டின் வாசலில் நின்று குறைத்துக் கொண்டிருந்தன. இதனால் ஆத்திரமடைந்த மீனாட்சி, அந்தச் சிறிய நாய்க்குட்டிகளை ஒவ்வொன்றாகத் தூக்கிச் சுவற்றில் ஓங்கி வீசியுள்ளார். அந்த நாய்க்குட்டிகள் வலியால் துடிதுடிக்கக் கத்துவதையும் பொருட்படுத்தாமல், அவர் மீண்டும் மீண்டும் அத்தகைய செயலில் ஈடுபட்டது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்தக் கொடூரமான வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணிற்கு எதிராகப் பலரும் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர். விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், வாய் பேசாத உயிரினங்களுக்கு இத்தகைய சித்திரவதையை அளித்த மீனாட்சி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். நவீன காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் இத்தகைய அநீதிகள் வெளிச்சத்திற்கு வருவது ஆறுதலளித்தாலும், மனித நேயம் மறைந்து வருவதைச் சுட்டிக்காட்டுவதாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.

Muthu Mani

Recent Posts

“இந்த பூனைக்குட்டிக்கு உங்க பூனையே தந்தை” நீங்க தான் வளர்க்கணும்… பக்கத்துக்கு வீட்டாரின் வாக்குவாதத்தால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…

4 minutes ago

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

7 minutes ago

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

11 minutes ago

பகீர்..! கிரிக்கெட் மேட்ச் முடிந்த சில மணி நேரங்களில்.. மகளைக் கொன்று தாயும் தற்கொலை.. நடந்தது என்ன..? வெளியான பகீர் பின்னணி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…

16 minutes ago

பகீர்!.. வாக்கு கேட்ட தவெக பெண் நிர்வாகியை செருப்பால் அடித்த போதை ஆசாமி… வைரலாக அரைநிர்வாண வீடியோ…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…

24 minutes ago

அடுத்த பரபரப்பு..! மனைவி சொத்து விவரங்களை மறைத்தார் ஆதவ் அர்ஜுனா..? வேட்புமனுவை ரத்து செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் மனு..1!

வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…

30 minutes ago