தாலியின் ஈரம் கூட காயல..! “நடத்தையில் சந்தேகம்” திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் தற்கொலை…!!

Spread the love

கர்நாடக மாநிலம், நெலமங்கலா தாலுகா, பாகலகுண்டே போலீஸ் எல்லைக்குட்பட்ட மல்லச்சந்திரா பகுதியைச் சேர்ந்தவர் லிகித் சிம்ஹா. இவருக்கும் ஐஸ்வர்யா என்ற பெண்ணுக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா தனது கணவருடன் மல்லச்சந்திராவில் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று ஏற்பட்ட மோதலின் போது, ஐஸ்வர்யாவின் பெற்றோர் அங்கு வந்து மருமகனிடம் சமரசம் பேசிச் சண்டையை முடித்து வைத்துள்ளனர். அவர்கள் மாலையில் வீடு திரும்பிய பிறகு, மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லிகித் சிம்ஹா, ஐஸ்வர்யாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா, கணவர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் தனது புடவையால் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த லிகித் சிம்ஹா, மனைவி தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஐஸ்வர்யாவின் பெற்றோருக்குத் தகவல் அளித்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஐஸ்வர்யாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் லிகித் சிம்ஹாவைக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

ஐயோ..! 1 மில்லிமீட்டர் தான் கேப்… கண்ணிமைக்கும் நொடியில் எமன்… சீறிப்பாய்ந்த கார்… மயிரிழையில் உயிர் பிழைத்த தம்பதி…!!

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…

5 மணத்தியாலங்கள் ago

இதெல்லாம் AI வீடியோங்க!.. டிகிரி வாங்க ரூ.1000 போதுமா?… கையில் போன்… டேபிளில் புத்தகம்… தேர்வு ஹாலில் இருந்து வெளியான பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…

5 மணத்தியாலங்கள் ago

“மகளை திருமணம் செய்து திருந்த போகிறேன்…” 20 வயது இல்ல… சின்ன பிள்ளை மாதிரி தான் இருக்கு…! வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…

5 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா..! ஆடி கார் கொடூரம்… பலியான ஏழை வியாபாரி… மருமகனை காப்பாற்ற பாஜக புள்ளியின் பகீர் நாடகம்… அம்பலப்படுத்திய சிசிடிவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ பாவம்… அமெரிக்காவில் நடந்த கொடூரம்… முதுகலைப் பட்டம் முடித்த இளம் பெண் மாரடைப்பால் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…

6 மணத்தியாலங்கள் ago

“என்ன விடுங்க ப்ளீஸ்…”  15 வயது சிறுமியை சீரழித்த சிறுவர்கள் உள்பட 7 பேர்… மகளை காணாமல் தேடிய பெற்றோருக்கு ஷாக்… நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…

6 மணத்தியாலங்கள் ago