சிவகங்கை, காரைக்குடியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் வசித்திருக்கும் வீட்டின் எதிரே கோகுல் சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் புதுத் தம்பதிகள் இருவரும் வீட்டில் அறையில் தனிமையில் இருந்ததை அறையின் ஜன்னல் தொறந்து இருந்ததால். எதிர் வீட்டில் இருந்த கோகுல் சந்தோஷ் என்பவர் அவரது வீட்டின் மாடியில் இருந்து வீடியோ எடுத்துள்ளார். சந்தோஷ் அவரது நண்பரான சித்த மருத்துவர் ஹரிஹரசுதனும் வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். பின்பு இந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று அப்பெண்ணை மிரட்டி பணம் பறிக்கலாம் மற்றும் உல்லாசத்தை அனுபவிக்கலாம் என்று சித்த மருத்துவர் ஹரிஹரசுதன் கூறியுள்ளார்.
அப்பெண்ணிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு, போலிஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர் .பின்பு உன்னுடைய ஆபாச வீடியோ எங்களிடம் உள்ளது நாங்கள் கூறுகிற அனைத்தையும் நீ செய்ய வேண்டும் என்று சில கூட்டாளிகளை இணைத்துக் கொண்டு மிரட்டி உள்ளனர். அதனால் அந்தப் பெண்ணும் அவர்கள் சொன்ன இடத்திற்குச் சென்றுள்ளார். கணவன் மனைவி இருவரும் தனிமையில் இருந்த வீடியோவை காட்டி மிரட்டி உள்ளனர். அப்பெண்ணோ கத்தி கதறி அழுதுள்ளார், வீடியோவை டெலிட் செய்யுங்கள் என்று கதறி உள்ளார்.
புதுமணத் தம்பதிகள் இருவரும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் களத்தில் இறங்கிய போலீசார் சித்த மருத்துவரையும் , கோகுல் சந்தோஷ் மற்றும் கூட்டாளியான முத்துப்பாண்டி மற்றும் 17 வயது சிறுவனையும் அதிரடியாக கைதுச் செய்துள்ளனர். அவர்களை விசாரித்ததில் அந்த வீடியோ வாட்ஸப் குரூப்பில் பகிரப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த நாலு கீழ்த்தனமான மனிதர்களின் அலைபேசியை பறிமுதல் செய்து சைபர் கிரைம் போலீசுக்கு அனுப்பி ஆய்வு செய்து வருகின்றனர்.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…