மொட்டை மாடியை சுத்தம் செய்த தொழிலாளர்கள்…! சிதறி கிடந்த எலும்புகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

By Devi Ramu on ஐப்பசி 17, 2025

Spread the love

கேரள மாநிலம் மணப்புரம் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அங்கு ஃபிளக்ஸ் போர்டுகளை அகற்றும் போது சிதறி கிடந்த எலும்பு கூடுகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எலும்புக்கூடுகளை ஆய்வு செய்தனர். அது ஒரு மாதமே பழமையான எலும்புக்கூடு என்பது தெரியவந்தது.

இறந்தவர் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இதற்கு முன்பு அந்த கட்டிடத்தில் வசித்து வந்தது தெரியவந்தது. இதனால் அந்த குடும்ப உறுப்பினர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த கட்டிடத்தில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.