நல்லவேளை தப்பிச்சோம்..! கடவுளின் அருளால் கிடைத்த மறுபிறவி… குடும்பத்துடன் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிய பிரபல நடிகர்… கண்ணெதிரே மரண பயம் காட்டிய நேபாள வெள்ளப்பெருக்கு…!!

By Gayathri on ஆவணி 28, 2026

Spread the love

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கோரமான திடீர் வெள்ளப்பெருக்கில் இருந்து, பாலிவுட் நடிகர் அங்குர் ரத்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். கைலாஷ் யாத்திரையாக தனது மனைவி ஷில்பாவுடன் கடந்த 22-ஆம் தேதி காத்மாண்டு சென்ற அவர், பேரிடர் நிகழ்ந்த பகுதிக்கு மிக அருகிலேயே தங்கியிருந்துள்ளார். விபத்து நடப்பதற்கு சுமார் 12 மணி நேரத்திற்கு முன்பாக, அக்குறிப்பிட்ட இடத்தில்தான் அவர்கள் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்துள்ளனர். இயற்கை சீற்றம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே அவர்கள் அங்கிருந்து புறப்பட்டதால் மாபெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தங்களின் தங்கும் விடுதி வெள்ளம் பாதித்த பகுதியிலிருந்து வெறும் 15 நிமிட தூரத்தில் அமைந்திருந்ததை நினைவுகூர்ந்த அவர், கடவுளின் அருளால் மட்டுமே தங்களுக்கு மறுபிறவி கிடைத்துள்ளதாக உருக்கமுடன் தெரிவித்துள்ளார். தாங்கள் பத்திரமாக மீண்டதை எண்ணி ஒருபுறம் நிம்மதி அடைந்தாலும், இந்த கோர விபத்தில் சிக்கி பலியானவர்களை நினைக்கும் போது தனது இதயம் நொறுங்குவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், இந்த எதிர்பாராத இயற்கைப் பேரிடரில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்காக தனது ஆழ்ந்த இரங்கலையும் அவர் பதிவு செய்துள்ளார்.