சமீபத்தில் நடந்த விழாவில் லெஜண்ட் சரவணன் நடித்த படத்தின் டைட்டில் டீசர் அறிவிக்கப்பட்டது. இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான இந்த படத்துக்கு லீடர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து விழாவில் நடிகர் லெஜண்ட் சரவணன் பேசியதாவது, லீடர் என்ற தலைப்பை பார்த்ததும் இது ஒரு அரசியல் படமா என்று பலருக்கும் கேள்வி எழலாம். ஆனால் இது ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.
ஒரு அப்பாவி தந்தையும் மகளும் அமைதியான வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் ஒரு கும்பல் அவர்களின் வாழ்க்கையில் குறுக்கீடு செய்கிறது. இதுதான் இந்த படத்தின் கதை. ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் தனது திரைக்கதையால் இதை சிறப்பாக செதுக்கியுள்ளார். இந்த கதை இந்த தலைமுறைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
சின்ன வயதில் இருந்தே எனக்கு சினிமா மீது ரொம்பவும் ஆர்வம் இருந்தது. என்னுடைய வீட்டில் இருந்த ஃபிரிட்ஜில் இரண்டு பக்கங்களிலும் ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் புகைப்படங்களை ஒட்டி வைத்திருப்பேன். ஒருநாள் நானும் இவர்களைப் போல பெரிய ஸ்டார் நடிகராக ஆவேன் என்று என் அம்மாவிடம் அடிக்கடி சொல்லுவேன் என்று லெஜண்ட் சரவணன் பேசியிருக்கிறார்.
