“முந்திச் சென்ற பேருந்து” ஆத்திரத்தில் நடத்துனரைத் துப்பாக்கியால் சுட்ட புல்லட் ஆசாமி… உ.பி-யில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ..!!

By Soundarya on மாசி 5, 2026

Spread the love
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், பட்டப்பகலில் அரங்கேறிய இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்ற பேருந்து தனது புல்லட் வாகனத்தை முந்திச் சென்றதால் ஆத்திரமடைந்த நபர், பேருந்து நடத்துனரை நோக்கித் தனது இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்துச் சுட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக பேருந்தின் ஜன்னல் கதவுகள் மூடப்பட்டிருந்ததால், தோட்டா யாருடைய உடலிலும் பாயாமல் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்தக் கொடூரச் செயலை பேருந்திற்குள் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், ஒவ்வொரு சந்திப்பிலும் இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்வது பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.