“ஐயோ… என் குழந்தையைக் காப்பாத்துங்க?… பிளாட்பாரத்தில் உறைந்து நின்ற தாய்…சாதுரியமாகச் செயல்பட்ட அதிகாரி… சிலிர்க்க வைக்கும் சம்பவம்…!”

By Swetha on ஆவணி 4, 2026

Spread the love

குழந்தைக்காகப் பால் வாங்கி வரச் சென்ற அந்தத் தாய், அடுத்த சில நொடிகளில் தனது உலகமே தன்னிடமிருந்து நழுவிப்போகும் எனச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. பால் வாங்கிக் கொண்டு அவள் திரும்புவதற்குள், குழந்தை மட்டும் உள்ளே இருக்கும்போதே ரயில் திடீரெனப் புறப்படத் தொடங்கியது. மேடையில் திகைத்து நின்ற தாயின் அலறலும் பதற்றமும் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

அப்போது அங்குப் பணியில் இருந்த ரயில்வே குவார்ட் , நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து ஒரு நொடியும் தாமதிக்காமல் செயல்பட்டார். உடனடியாகச் சமயோசிதமாகச் செயல்பட்டு, ரயிலை நிறுத்த சிக்னல் கொடுத்து வண்டியை உடனடியாகப் பதற்றமின்றி நிறுத்தினார். அவரது இந்தத் துரிதமான நடவடிக்கை, ஒரு பெரிய அசம்பாவிதத்தைத் தடுத்தது.

   

ரயில் நின்றதும், ஓடிவந்த தாய் தன் குழந்தையைக் கட்டிப்பிடித்துக் கண்ணீருடன் மீட்டெடுத்தாள். இருவரும் பாதுகாப்பாக இருப்பதைக்கண்ட அங்கிருந்த பயணிகள் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். மனிதநேயமும், சரியான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவும் ஒருவரின் முழு உலகத்தையே காப்பாற்ற முடியும் என்பதற்கு இந்நிகழ்வே சான்றாகும்.