தேமுதிகவுக்கு 10.. எங்களுக்கு வெறும் 8 சீட்டா..? கொந்தளிக்கும் சிறுத்தைகள்… கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீட்டில் வெடித்தது புதிய மோதல்…!!

By Soundarya on பங்குனி 6, 2026

Spread the love

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் (விசிக) திமுக தலைமைக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் இருந்தே அதிக தொகுதிகளைக் கேட்டு வந்த விசிகவிற்கு, தற்போது 8 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை விசிக நிர்வாகிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாக அமைந்தது, கூட்டணியில் புதிதாக இணையவுள்ள தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாக வெளியான தகவலே ஆகும். தங்களை விட தேமுதிகவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதை விசிகவினர் ரசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. நீண்டகாலமாகத் தோழமை பாராட்டி வரும் தங்களை விட, புதிய வரவான தேமுதிகவிற்கு கூடுதல் இடங்கள் கிடைப்பது தார்மீக ரீதியாகச் சரியல்ல என்பதே அவர்களின் வாதமாக இருக்கிறது.

   

மேலும், காங்கிரஸ் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு ராஜ்யசபா சீட்டுகளை வழங்க திமுக தலைமை முன்வந்திருப்பது விசிகவினரை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது. தங்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில் திமுக பாரபட்சம் காட்டுவதாக விசிக நிர்வாகிகள் கருதுகின்றனர். இந்தத் தொகுதிப் பங்கீடு விவகாரம் திமுக தலைமையிலான கூட்டணியில் ஒருவித சலசலப்பை உருவாக்கியுள்ளது.