“உல்லாசத்திற்கு வந்த வியாபாரி.. காதலனைத் தீர்த்துக்கட்ட கணவனுடன் கைக்கோர்த்த கள்ளக்காதலி.. நெஞ்சப் பதறவைக்கும் பின்னணி”..!!

Spread the love

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பீடி காலனியைச் சேர்ந்த முகமது காசிம் (27) என்பவர், பழைய இரும்பு கடை வியாபாரம் செய்து வந்தார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த அர்பியா கவுசர் என்பவரும் திருமணத்திற்கு முன்பாகக் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில், அர்பியா கவுசருக்கும் முகமது அக்பர் என்பவருக்கும் திருமணமாகி, அவர்கள் பெங்களூரு பேடராயனபுரா பகுதியில் வசித்து வந்தனர். திருமணத்திற்குப் பின்பும் சமூக வலைத்தளம் மூலமாக முகமது காசிமுடன் அர்பியா கவுசருக்கு மீண்டும் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி அர்பியா கவுசரின் வீட்டிற்கு முகமது காசிம் வந்துள்ளார். இதுகுறித்துத் தகவல் அறிந்த கணவர் முகமது அக்பர், தனது உறவினர்களுடன் சேர்ந்து அவர்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்பர் மற்றும் அவரது உறவினர்கள் முகமது காசிமை கொடூரமாக அடித்துத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த காசிம், ராமநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பேடராயனபுரா போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், முகமது அக்பரின் கள்ளத்தொடர்பை அவரது கணவர் கண்டித்தும் அர்பியா கவுசர் அதைக் கைவிடாததால், காசிமைத் தீர்த்துக்கட்ட அக்பர் திட்டமிட்டது தெரியவந்தது. மேலும், இக்கொலைக்கு முகமது காசிமின் கள்ளக்காதலியான அர்பியா கவுசரே உதவி செய்ததும் அம்பலமானது. இதனையடுத்து, அர்பியா கவுசர், அவரது கணவர் முகமது அக்பர் மற்றும் அவரது உறவினர்களான ஓவைஸ் வாசா, முகமது சாந்த் பாஷா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Muthu Mani

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

5 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

5 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

5 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

5 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

6 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

6 மணத்தியாலங்கள் ago