சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ரம்யா என்ற மாணவி கூறியதாவது, நான் நினைக்காத அனைத்தும் என் வாழ்வில் நடந்து வருகிறது. அப்பா கூலி வேலை பார்க்கிறார். அவரால் என்னை உயர்கல்வி படிக்க வைக்க முடியவில்லை. நான் வேலைக்கு சென்று பணம் சேர்த்து வந்தேன். எனது ஆசிரியை அப்பாவை அழைத்து கல்லூரிக்கு பணம் கட்டிக் கொள்ளலாம் எனக் கூறி என்னை கல்லூரிக்கு அனுப்ப கூறினார்.
எனது கல்வி கட்டணத்தை ஆசிரியர் செலுத்தினார். கல்வி சார்ந்த எனது அனைத்து செலவுகளையும் புதுமைப்பெண் திட்டத்தால் கிடைத்த 1000 ரூபாய் மூலம் நிறைவேற்றிக் கொண்டேன் என் அம்மா செவித்திறன் குறைபாடு கொண்டவர். அம்மா அப்பாவுக்கு திருமணம் ஆகி நீண்ட நாட்கள் கழித்து தான் நான் பிறந்தேன். காது கேட்காத நீ எதுக்கு பெண்ணை படிக்க வைக்கிறாய் என நிறைய பேர் பேசியதை நான் நேரடியாக கேட்டு இருக்கிறேன்.
எனக்கு மன வருத்தமாக இருக்கும். 1000 ரூபாயில் மாத மாதம் 100 ரூபாய் மிச்சப்படுத்தி என் அம்மாவுக்கு செவி திறன் கருவி வாங்கி கொடுத்தேன். அதன் மூலம் அம்மா தற்போது கேட்கும் திறனை பெற்றுள்ளார் என மாணவி உருக்கமாக பேசினார். இதனை கேட்டதும் மாணவியின் தாய் தந்தை மட்டுமில்லாமல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரும் கண்ணீர் விட்டு அழுதனர்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…