ஊழலுக்கு எதிரான போராட்டம், சோஷியல் மீடியாக்களை தடை செய்ததை ஆகியவற்றை எதிர்த்து போராட்டம் என மெல்ல மெல்ல எழுச்சிபெற்ற நேபாள இளைஞர்களுடைய போராட்டம், கடைசியில் வன்முறைப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. நாடாளுமன்றத்துக்கு தீ, பிரதமர் வீட்டுக்கு தீ என எங்கு பார்த்தாலும் பற்றியெரிகிறது. வன்முறைக்கு வன்முறையாலேயே பதிலளித்த ஆட்சியாளர்கள் ஓடி ஒளிந்து கொண்டுள்ளனர்.
நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், பிரதமர் இல்லம் என அரசு கட்டடங்கள் அனைத்தும் தீக்கரையாகி உள்ளன. இந்நிலையில் அரசியல் குழப்பம் நீடிக்கும் நேபாளத்தில் அதிகாரத்தைக் ராணுவம் கையிலெடுத்துள்ளது .
