200 மாடுகள் பலி… 500 காலத்துச் சாபம்..! நள்ளிரவில் நடந்த சிறுவர்கள் திருமணம்.. பின்னணியில் இருக்கும் திக் திக் ரகசியம்…!!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்திலுள்ள படோடியா கிராமத்தில், சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஒரு விசித்திரமான சாபத்திலிருந்து தப்பிக்க, நள்ளிரவில் இரண்டு சிறுவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹோலி பண்டிகைக்கு முந்தைய இரவு, சோலாரிக் காலத்தில் (ஆடி அல்லது புரட்டாசி போன்ற ஒரு காலம்) தூங்கிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை எழுப்பி, ஒருவரை மணமகனாகவும் மற்றொருவரை மணமகளாகவும் அலங்கரித்து இத்திருமணம் நடத்தப்பட்டது.

இந்த வினோத மரபிற்குப் பின்னால் ஒரு நீண்ட வரலாறு உள்ளது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு, ‘கேர்’ (Kher) இனத்தினர் இக்கிராமத்தை விட்டு வெளியேறும்போது, இந்தத் திருமணச் சடங்கை நடத்தத் தவறினால் கிராமமே அழிந்துவிடும் என்று சாபமிட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை கடும் மழையால் இத்திருமணம் தடைப்பட்டபோது, கிராமத்தில் அக்கல் ஏற்பட்டதோடு 200-க்கும் மேற்பட்ட கறவை மாடுகள் திடீரென உயிரிழந்ததாகவும், அந்த அச்சத்தினால் இன்றும் இச்சடங்கைத் தொடர்வதாகவும் கிராம மக்கள் நம்புகின்றனர்.

இச்சடங்கு வெறும் நம்பிக்கையோடு நின்றுவிடாமல், சமூகச் சீர்திருத்தக் கருத்துகளையும் உள்ளடக்கியுள்ளது. திருமணத்தின் போது வளர்க்கப்படும் ஹோம குண்டத்தில் பிளாஸ்டிக், புகையிலை, பீடி போன்ற போதை வஸ்துக்களைப் போட்டு எரிப்பதன் மூலம் ‘போதைக்கு எதிரான’ செய்தியை மக்கள் பரப்புகின்றனர். மேலும், ‘மாமேரா’ (Mammera) எனப்படும் தாய்மாமன் சீர் சடங்கின் போது, மணமக்களுக்குப் பணம் மற்றும் நகைகளுடன் பேனா மற்றும் புத்தகங்களைப் பரிசாக அளித்து, வருங்காலத் தலைமுறைக்குக் கல்வியின் அவசியத்தையும் வலியுறுத்துகின்றனர்

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago