“கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க!”.. நள்ளிரவில் சேகர் பாபுவுக்கு வந்த போன் கால்.. வெளுத்து வாங்கிய ஸ்டாலின்.. திமுகவில் வெடித்த புதிய புயல்..!!

Spread the love

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் மற்றும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருடன் கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் உள்ள கட்சியின் அறக்கட்டளைக்குச் சொந்தமான விருந்தினர் இல்லத்தில் தங்கி ஓய்வெடுத்தார். இவர்களின் இந்தத் திடீர் பயணம் உளவுத்துறையினரின் கவனத்தை ஈர்த்த நிலையில், அண்மையில் நடந்த தேர்தல் தோல்வி குறித்தும், அதற்கான கணக்கு வழக்குகள் குறித்தும் கலந்தாலோசிக்கவே இந்த ரகசிய சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது என்ற விபரங்கள் மத்திய உளவுத்துறை வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சந்திப்பின் போது, தேர்தலுக்காக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட கனமான தொகைகள் குறித்தும், கட்சியின் தோல்வி குறித்தும் ஸ்டாலின் ஆலோசித்துள்ளார். அப்போது சபரீசன் மற்றும் உதயநிதி ஆகியோர், ஐஏஎஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தங்களை ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். அமைச்சர்கள் தங்களுக்குப் போட்டியாக யாரும் வந்துவிடக் கூடாது என்ற சுயநலத்தோடு செயல்பட்டதாகவும், திட்டமிட்டு கொடுத்த தேர்தல் நிதியைச் சரியாகச் செலவழிக்காமல் முறைகேடு செய்துவிட்டதாகவும் உதயநிதி கோபத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பொருளாளர் டி.ஆர்.பாலு அளித்த விபரங்களின் அடிப்படையில், தேர்தல் நிதியைச் சரியாகப் பயன்படுத்தாத அமைச்சர்களைத் தொடர்புகொண்டு ஸ்டாலின் கடுமையாகக் கண்டித்துள்ளார். அதன்படி சேகர்பாபுவிடம், “கொளத்தூர் தொகுதியில் நான் தோற்பேன் என்று தெரிந்திருந்தும் உனக்கு அதைப் பற்றி கவலை இல்லாமல் உன் தொகுதியை மட்டும் பார்த்துக் கொண்டாய்; வடசென்னையில் உன்னைத் தவிர வேறு யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு சதி செய்திருக்கிறாய்” என்று கொந்தளித்துள்ளார். மேலும், அவர் கேட்ட தொகையை முழுமையாகக் கொடுத்த பிறகும் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி, ஸ்டாலின் அவரை மிகக் கடுமையாக வறுத்தெடுத்துள்ளார்.

இறுதியாக, தேர்தல் பணிகளுக்காகக் கொடுக்கப்பட்ட தொகைக்கு உண்மையான கணக்குகளைக் காட்ட வேண்டும் என்றும், அதில் ஏதேனும் பொய் இருந்தால் நடவடிக்கை பாயும் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். மேலும், கட்சி கொடுத்த தொகைக்கும் அவர்கள் காட்டும் கணக்கிற்கும் வித்தியாசம் இருந்தால், மீதித் தொகையைக் கட்சி கணக்கில் செலுத்த வைக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. இந்தத் தேர்தல் கணக்கு வழக்குகளை முழுமையாக ஆராய்ந்தப் பிறகு, கட்சியில் செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள் குறித்தும் இந்த கூர்க் சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

Muthu Mani

Recent Posts

ஐயோ ரத்தம்..! கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ்…சென்ட்ரல் சிசிடிவியில் சிக்கிய கொலையாளிகள்… நடுங்க வைக்கும் பரபரப்பு வீடியோ…!!

சென்னையிலிருந்து புதுடெல்லி நோக்கிப் பயணித்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த சிவப்பு நிறப் பெட்டியொன்றிலிருந்து ரத்தம் கசிவதையும், துர்நாற்றம் வீசுவதையும்…

7 minutes ago

அடச்சீ… சுதந்திர தின ஒத்திகையில் கொடூரம்… 2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்… கொதித்தெழுந்த நெட்டிசென்கள்…!

கடலூர் மாவட்டம் சாத்திப்பட்டில் இயங்கி வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சிகள் முடிந்து மாணவர்கள் வீடு…

15 minutes ago

ஒரே நிமிஷத்தில் ரூ.60 லட்சம் அபேஸ்.! நம்ப வைத்து ஏமாற்றிய நிலத் தரகர்கள்… ரியல் எஸ்டேட் அதிபருக்குக் காத்திருந்த ஷாக்…!!

கோவையில் போலி அதிகாரப் பத்திரம் மூலம் நிலத்தை விற்பதாகக் கூறி, ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்யப்பட்ட…

22 minutes ago

அட கொடுமையே… ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… சிறுவன் தப்பியோட்டம்… உடந்தையாக இருந்த பெற்றோர் அதிரடி கைது…!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளிச் சிறுமி திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் காவல் நிலையத்தில்…

24 minutes ago

அடச்சீ… அவனை சும்மாவே விட கூடாது… 10 ரூபாய் கொடுத்து… 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்… 5 ஆண்டுகளுக்குப் பின்… கூண்டில் நின்ற காம கொடூரன்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் தஹானு அருகேயுள்ள ரான்ஷெட் வங்காட்பாடா கிராமத்தில், கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று…

32 minutes ago