‘அதிகாரம்’ இப்படித்தான் இருக்க வேண்டும்!… அமைச்சர் புஸ்சி ஆனந்திற்கு விஜய் செய்த ‘மாஸ்’ காரியம்… தலைமைச் செயலகத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சிச் சம்பவம்..!!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசு கடந்த 10-ஆம் தேதி முறைப்படி பதவியேற்றுக்கொண்டது. கட்சியின் தலைவரான ஜோசப் விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் புதிய அமைச்சரவையில் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழா முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த வாரம் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் (துறைகள்) அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, இன்று புதிய அமைச்சர்கள் அனைவரும் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தங்களது பிரத்யேக அறைகளில் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டு பணிகளைத் தொடங்கினர். அந்த வகையில், பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக ஆதவ் அர்ஜூனா தனது அறையில் கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து, அதே பொதுப்பணித்துறையின் மற்றொரு முக்கியப் பிரிவிற்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செங்கோட்டையனும் பொறுப்பேற்றுக்கொண்டார். செங்கோட்டையன் பொறுப்பேற்றுக் கொண்ட போது முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் வந்து அவருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதேபோல், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக புஸ்சி ஆனந்த் இன்று தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்ட தருணத்தில், முதலமைச்சர் விஜய் நேரில் வருகை தந்து, அமைச்சர் புஸ்சி ஆனந்தை வாழ்த்தி அவரது அமைச்சரவை இருக்கையில் அமரவைத்தார். இந்த நிகழ்வு அங்கிருந்த நிர்வாகிகளிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மற்றொருபுறம், சுகாதாரத்துறை அமைச்சராக அருண்ராஜ், உணவுத்துறை அமைச்சராக வெங்கட் ரமணன், மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சராக நிர்மல் குமார் ஆகியோரும் தங்களது பணிகளைத் தொடங்கினர். மேலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ராஜ்மோகன், கனிம வளத்துறை அமைச்சராக டி.கே.பிரபு மற்றும் தொழில்துறை அமைச்சராகக் கீர்த்தனா ஆகியோரும் இன்று தத்தமது அறைகளில் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டனர். பொறுப்பேற்றுக்கொண்ட அனைத்து அமைச்சர்களுக்கும் அந்தந்தத் துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் நேரில் சந்தித்துத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

Muthu Mani

Recent Posts

“எனக்கு 60 உனக்கு 25”.. 35 வயது தான் வித்தியாசம்… கிராமமே மிரண்டு போன ‘காதல் திருமணம்’.. வைரலாகும் தாத்தா-பேத்தி காதல் கதை…!!

60 வயது முதியவர் மற்றும் 25 வயது இளம்பெண் இடையிலான இந்த உறவு சமூக ரீதியாகப் பார்க்கும்போது மிகவும் விசித்திரமாகவும்,…

10 minutes ago

BREAKING: தங்கப் பிரியர்களுக்கு நிம்மதி: தங்கம் சவரனுக்கு ரூ.960-ம், வெள்ளி கிலோவுக்கு ரூ.15,000-ம் அதிரடி சரிவு..!!

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 20) பொதுமக்களுக்குச் சற்று நிம்மதி அளிக்கும் வகையில் கணிசமாகக்…

31 minutes ago

பகீர்..! திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து… படுக்கையறை ரகசியத்தை அம்பலப்படுத்திவிட்டு காதலனுடன் ஓடிய மனைவி…!!

திருமணமாகி நான்கு ஆண்டுகள் தம்பதியினர் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், மனைவியின் மனதில் அவரது பழைய முதல் காதல் மீண்டும்…

35 minutes ago

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம்..!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு…

49 minutes ago

“தவறான ஊசியால் போன கை” தெர்மாகோல் பெட்டியில் தாயின் கையோடு போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த இராணுவ வீரர்… மருத்துவ அலட்சியத்தின் உச்சக்கட்டம்..!!

கான்பூரில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) வீரரான விகாஸ் சிங், தனது தாயின் துண்டிக்கப்பட்ட கையை ஒரு தெர்மாகோல்…

53 minutes ago

BREAKING: 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது… உடனே பாருங்க..!!

தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.31% மாணவ,…

1 மணத்தியாலம் ago