உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில், 63 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரியான்வ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் வசிக்கும் இந்த மூதாட்டி, தனது மூன்று மகன்களும் வாழ்வாதாரத்திற்காக வெளியூரில் உள்ள நிலையில், இவர் செங்கல் சூளைகளில் வேலை செய்வதால், வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு சுமார் 9:30 மணியளவில், அவர் இயற்கை உபாதை கழிக்க ஊர் எல்லைக்குச் சென்றபோது, மறைந்திருந்த முகமூடி அணிந்த நபர் ஒருவர் அவரைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அப்போது அந்தப் பெண் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்துத் தகவல் அறிந்த தரியான்வ் போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தலைமறைவாக உள்ள குற்றவாளியைத் தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதியவர் என்றும் பாராமல் நடத்தப்பட்ட இந்த வன்கொடுமை அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரபல பங்குச்சந்தை ஆலோசகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர் மீது பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் காவல் நிலையத்தில்…
தமிழக அரசு ஊழியர்களின் மருத்துவ நலனைப் பாதுகாக்கும் பொருட்டு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.838 கோடி நிதி ஒதுக்கீடு…
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…