அடக்கடவுளே ஷாக்..! பெண் வரவேற்பாளரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து…. ஹோட்டலில் தொழிலதிபரின் மகன் அட்டூழியம்…!!

By Soundarya on கார்த்திகை 16, 2025

Spread the love

உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் பிரபல நகை வியாபாரியின் மகன், குடிபோதையில் இருந்தபோது ஹோட்டல் ஊழியரைத் தாக்கியதாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஹோட்டல் பாரில் வரவேற்பாளராகப் பணியாற்றிய பாதிக்கப்பட்ட பெண், முறையான புகார் அளித்ததை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட அமன் அகர்வால் கைது செய்யப்பட்டார்.

சிசிடிவியில் பதிவாகி தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்படும் இந்த சம்பவம், அமன் அகர்வால் இரண்டு பெண்களுடன் ஹோட்டல் வளாகத்திற்குள் நுழைவதைக் காட்டுகிறது. போதையில் இருப்பது போல் தெரிந்த அவர், பெண் வரவேற்பாளருடன் உரையாடுவதைக் காணலாம். பத்திரிகையாளர் சச்சின் குப்தா பகிர்ந்து கொண்ட வீடியோவில், அமன் முதலில் அவரது கையைப் பிடித்து, கன்னத்தில் முத்தமிடுவது போல் உரையாடலில்  ஈடுபடுகிறார். சிறிது நேரத்திற்குப் பிறகு,அமன் அவளது கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக அவள் கன்னத்தில் முத்தமிடுவதைக் காணலாம். வரவேற்பாளர் அமனின் தகாத நடத்தைக்காக அவர் மீது புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, போலீசார் அவரைக் கைது செய்து காவலில் எடுத்தனர்.