ஒரு வைரல் வீடியோவில், ஒரு வயதான பாட்டி இரண்டு எடை இயந்திரங்களுடன் சாலையோரத்தில் அமர்ந்திருக்கிறார். மழை பெய்கிறது, அதனால் அவர் ஒரு குடையைப் பிடித்து கொண்டு தன்னுடைய தொழிலை செய்வதற்காக உட்கார்ந்திருக்கிறார். இந்த வானிலையிலும் இயந்திரத்தில் தன்னை எடைபோட யாராவது வருவார்கள் என்றும், அதனால் தனக்கு கொஞ்சம் பணம் சம்பாதிக்க முடியும் என்றும் நம்புகிறார்.
View this post on Instagram
அந்த மூதாட்டி சோகமான முகத்துடன் அமர்ந்திருக்கிறார், அப்போது ஒரு ஆண் அவரை அணுகி இயந்திரத்தில் எடைபோடத் தொடங்குகிறான். பின்பு அந்த மூதாட்டியிடம் ஒரு தொகையை கொடுக்கிறார். மேலும் ஒரு புடவையையும் பரிசாக கொடுக்கிறார். பின்பு அவரோடு அமர்ந்து தேநீர் அருந்தி மகிழ்கிறார். இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில் இந்த தள்ளாடும் வயதிலும் தன்னுடைய திறமையால் உழைத்து வாழும் இந்த மூதாட்டிக்கு வாழ்த்துக்கள் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
