தஞ்சாவூர் மாவட்டம், விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி அவரைப் போலவே வேடமிட்டு தூய்மை பணியாளர்களுக்கு விருந்து அளித்த தொண்டரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி இரண்டிலும் விஜயகாந்த் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளார். படத்தில் இருப்பது போலவே நிஜத்திலும் ஏழை மக்களுக்கு நிறையவே உதவிச் செய்துள்ளார். விஜயகாந்த் அவர்களை மக்கள் கேப்டன் என்று அன்போடு அழைத்து வந்தனர். இன்று ஆகஸ்ட் 25ஆம் தேதி விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள். என்னதான் பூமியில் இருந்து மறைந்தாலும் , மக்களின் மனதிலே குடியிருக்கிறார் இன்று வரை.
தேமுதிக சார்பில் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி தஞ்சாவூரில் உணவு , புத்தாடை என பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. தஞ்சாவூர் மாநகராட்சியை 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்பொழுது வேகமாக கார் வந்து நின்றது. காருக்குள்ளே இருந்து ஒரு நபர் இறங்கினார். அவர் பார்ப்பதற்கு விஜயகாந்தை போலவே வேடமிட்டு இருந்தார். அந்த நபரைப் பார்த்து சில நொடிகள் அங்கிருந்த தூய்மை பணியாளர்கள் அதிர்ந்துபோயினர்.
ஏனென்றால் அவர் பார்ப்பதற்கு அச்சு அசலாக விஜயகாந்த் போலவே இருந்தார். தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு விருந்து வைத்துள்ளார். விருந்தில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, முட்டை, மட்டன் மசாலா, செட்டிநாடு சிக்கன், மீன் வறுவல், சாதம், ரசம், மோர் என பலவகை உணவை வைத்து படையல் போல் விருந்தை அளித்தனர் . இதற்காக கலைஞரான கணேசனை விஜயகாந்த் போல வேடமிட்டு விருந்தை தொண்டர்கள் நிறுவனம் வழங்கியது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…