ஏழைகளின் தெய்வமே..! திடீரெனெ வந்து நின்ற கேப்டன் விஜயகாந்த்… அதிர்ச்சியில் கண்கலங்கி போன தூய்மைப்பணியாளர்கள்…!!

By Divyamayakannan on ஆவணி 25, 2025

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம், விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி அவரைப் போலவே வேடமிட்டு தூய்மை பணியாளர்களுக்கு விருந்து அளித்த தொண்டரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி இரண்டிலும் விஜயகாந்த் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளார். படத்தில் இருப்பது போலவே நிஜத்திலும் ஏழை மக்களுக்கு நிறையவே உதவிச் செய்துள்ளார். விஜயகாந்த் அவர்களை மக்கள் கேப்டன் என்று அன்போடு அழைத்து வந்தனர். இன்று ஆகஸ்ட் 25ஆம் தேதி விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள். என்னதான் பூமியில் இருந்து மறைந்தாலும் , மக்களின் மனதிலே குடியிருக்கிறார் இன்று வரை.

தேமுதிக சார்பில் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி தஞ்சாவூரில் உணவு , புத்தாடை என பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. தஞ்சாவூர் மாநகராட்சியை 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்பொழுது வேகமாக கார் வந்து நின்றது. காருக்குள்ளே இருந்து ஒரு நபர் இறங்கினார். அவர் பார்ப்பதற்கு விஜயகாந்தை போலவே வேடமிட்டு இருந்தார். அந்த நபரைப் பார்த்து சில நொடிகள் அங்கிருந்த தூய்மை பணியாளர்கள் அதிர்ந்துபோயினர்.

   

ஏனென்றால் அவர் பார்ப்பதற்கு அச்சு அசலாக  விஜயகாந்த் போலவே இருந்தார். தூய்மை பணியாளர்கள்  நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு விருந்து வைத்துள்ளார். விருந்தில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, முட்டை, மட்டன் மசாலா, செட்டிநாடு சிக்கன், மீன் வறுவல், சாதம், ரசம், மோர் என பலவகை உணவை வைத்து படையல் போல் விருந்தை அளித்தனர் . இதற்காக கலைஞரான கணேசனை விஜயகாந்த் போல வேடமிட்டு விருந்தை தொண்டர்கள் நிறுவனம் வழங்கியது.