ஐயோ… நைஸ் பாலம் அருகே நின்றவர் மீது உரிமம் பெற்ற… துப்பாக்கியால் வெடித்த வன்மம்… காலில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளம்… பெங்களூருவை அதிரவைத்த அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 15, 2026

Spread the love

பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் உள்ள பில்லகனஹள்ளி நைஸ் பாலம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், சீனா என்ற நபர் காலில் குண்டு பாய்ந்து காயமடைந்தார். நெசவாளர் காலனியைச் சேர்ந்த அவர், உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

விசாரணையின் முதற்கட்ட தகவலின்படி, சீனாவுக்கும் கொட்டிகெரே சம்பங்கி என்பவருக்கும் இடையே நைஸ் பாலம் அருகே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் பின்னர் முற்றிய நிலையில், சம்பங்கி தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் சீனாவின் காலில் சுட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார்.

   

https://twitter.com/HateDetectors/status/2110651598024392847/video/1

   

தகவலறிந்த கோணங்குட்டை காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள சம்பங்கியைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். முந்தைய பகை காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.